சிங்கப்பூரில் 86% ஊழியர்களுக்கு வேலையில் குறைந்த ஈடுபாடு
Seithi, 22 June 2026
சிங்கப்பூர் ஊழியர்களில் சுமார் 86 விழுக்காட்டினர் வேலையில் குறைவாக ஈடுபாடு காட்டுவதாகச் சிங்கப்பூர் வேலையிட அறிக்கை கூறுகிறது.
சிங்கப்பூர் இயக்குநர்கள் கழகமும் அமெரிக்காவின் Gallup நிறுவனமும் இணைந்து முதன்முறையாக அந்த ஆய்வை நடத்தியுள்ளன.
கடந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்துக்கு 10 டிரில்லியன் டாலர் உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாக அந்த ஆய்வு சொல்கிறது.
வேலையில் குறைவாக ஈடுபாடு காட்டுவோர் தென்கிழக்காசிய வட்டாரத்தில் 75 விழுக்காட்டினர், உலக அளவில் 80 விழுக்காட்டினர்.
அவர்களோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் நிலைமை மோசம் என்கிறது ஆய்வு.
சிங்கப்பூரில் 35 வயதுக்குக் குறைவானவர்களில் வேலையில் ஈடுபாடு காட்டுவோர் விகிதம் வெறும் 10 விழுக்காடு. 35 வயதுக்கும் மேற்பட்டோரில் ஈடுபாடு காட்டுவோர் விகிதம் 16 விழுக்காடு என்கிறது ஆய்வு.